பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக். பாடகி பொழுதுபோக்கு துறையிலிருந்து விலக முடிவு

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      உலகம்
Pak singer threaten pm modi 2019 11 05

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பாடகி ரபி பிர்சாடா தனது தனிப்பட்ட படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து, பொழுதுபோக்கு துறையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாடகி ரபி பிர்ஜடா. இவர் இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். அதில், இடுப்பில் கைகளை வைத்தபடி, உடலில் டைனமைட்டுடன் கூடிய  வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு உள்ளார். மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக விரும்புகிறேன் என்று அதனருகே பதிவிட்டு இருந்தார். இதற்கு சிலர் அவரை முட்டாள் என்றும், சிலர் அதிவிரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் விமர்சித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லாகூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் சமூக ஊடக தளங்களில் வைரலாகிய தனது புகைப்படம் தொடர்பாக, ரபி தனது தனிப்பட்ட ரகசியங்கள் திருடப்பட்டதாக பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பில் புகார் அளித்து உள்ளார். ரபி பிர்ஜடா தனது தனிப்பட்ட படங்கள் ஆன்லைனில் கசிந்ததை அடுத்து, பொழுதுபோக்கு துறையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். நான், ரபி பிர்ஜடா, நான் பொழுதுபோக்கு துறையிலிருந்து வெளியேறுகிறேன். அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பான். மேலும் எனக்கு ஆதரவாக மக்களின் இதயங்களை பெற முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து