முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் துறையினரை இழிவாக பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு - ஓட்டல் அலுவலரையும் மிரட்டியதாக புகார்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவல் துறையை இழிவாகப் பேசி, ஓட்டல் அலுவலரை மிரட்டியதாக நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீபத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் அளித்த பேட்டியில், காவல் துறையை இழிவாகப் பேசி மிரட்டல் விடுத்தார். காவல் துறை குறித்து பேட்டி அளித்த அவர், சட்ட நிபுணர்போல் எப்.ஐ.ஆர் குறித்துப் பேசினார். முதலில் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே எப்.ஐ.ஆர் போடவேண்டும் என்று மீரா மிதுன் பேசினார். என் மீது பல எப்.ஐ.ஆர்கள் போடப்பட்டன. அதை நான் முன்ஜாமீன் வாங்கி ரத்து செய்தேன். ஆனாலும் மேலும் மேலும் என் மீது எப்.ஐ.ஆர் போடுகிறார்கள். மேலும், இதை உயர் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும் மீரா மிதுன் தெரிவித்தார். அதன் மூலம் என்மீது வழக்கு போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் மீரா மிதுன் பேசினார். இதுகுறித்து ஓட்டல் அலுவலர் அருண் (27) என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் மீது போலீஸார் நடிகை மீரா மிதுன் மீது பிரிவு 294 (பி) (பொது இடத்தில் அவதூறாக, இழிவாகப் பேசுதல்) 506(1)( கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இதே போன்று நடந்துகொண்டதால் மீரா மிதுன் மீது இதே பிரிவின்கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து