முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழ்துளைக் கிணறு அமைக்க முன்அனுமதி அவசியம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்- ஆழ்துளை கிணறு அமைக்க கட்டாயம் முன்அனுமதி அவசியம் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் உடனான விழிப்புணர்வு குழுக்கூட்டம் கலெக்;டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு, புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை வரைமுறைப்படுத்திடும் நோக்கில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுவோர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடந்த 2015-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடும் நபர்கள் மாவட்ட நிர்வாகத்தில்  முறையே விண்ணப்பித்து பதிவுச் சான்று பெற்றிட வேண்டும்.  அதேபோல புதிய கிணறு தோண்டுதல்ஃஏற்கனவே உள்ள கிணறுகளை புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள கிணறு உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு சார்ந்த செயல் அலுவலரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே துவங்க வேண்டும்.  குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும்.
 பணிகளை துவங்கும் முன் கிணற்றின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட கிணற்றின் வகை, ஆழம் மற்றும் குறுக்களவு, பணி மேற்கொள்பவர் , கிணற்றின் உரிமையாளர் குறித்த விபரங்களை பணி நடக்கும் இடத்தில் அறிவிப்புப் பலகையாக அமைத்திட வேண்டும்.  பணி நடக்கும் இடத்தினைச் சுற்றி முள் கம்பி வேலி அல்லது தடுப்பு அமைக்கப்பட வேண்டும்.  கிணற்றைச் சுற்றிலும் 0.5 ஓ 0.5 ஓ 0.6 மீ அளவில் நில மட்டத்திலிருந்து 0.3 மீ மேல்புறமும், 0.3 மீ நிலத்திற்கு கீழ்புறமும் உள்ளவாறு தளம் அமைத்திட வேண்டும்.  பணி இடைவெளியின்போது துளையிடப்பட்ட குழிஃகிணறு சரியான முறையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும். பணி நிறைவுற்ற பின் கிணற்றைச் சுற்றியுள்ள சகதி குழிகளும், கால்வாய்களும் நிரப்பி மூடப்பட்டு முன்பிருந்த நிலைக்கு தரைமட்ட நிலையை கொண்டுவர வேண்டும்.  ஆழ்துளைக் கிணற்றின் மேல்புறத்தை உறுதியான மூடியைக் கொண்டு குழாயுடன் இணைத்து மூட வேண்டும்.  தமிழ்நாடு அரசு வரையறுத்துள்ள இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடுவோர் தவறாமல் பின்பற்ற வேண்டும்.  இத்தகைய விதிமுறைகளை முறையே பின்பற்றாமல் மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதோடு பணியில் ஈடுபட்ட ஆழ்துளைக் கிணறு அமைக்கும் உரிமையாளர்களின் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்திரன்,  பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் லூ.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து