சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் சிந்து தோல்வி

புதன்கிழமை, 6 நவம்பர் 2019      விளையாட்டு
sindhu 2019 11 06

புஸோவ் : சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

சீனாவின் புஸோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி. சிந்து, 42-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் பாய் யு போவை எதிர்த்து விளையாடினார். சுமார் 74 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 13-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்தஆண்டில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழையாமல் சிந்து வெளியேறும் 4-வது தொடர் இதுவாகும்.ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய் 17-21, 18-21 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் ரஸ்மஸ் ஜெம்கியிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட்டில் கனடாவின் ஜோசுவா ஹர்ல்பர்ட் யு, ஜோஸ்பின் வு ஜோடியை வீழ்த்தியது.இதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-9, 21-15 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் பிலிப், ரயான் ஜோடியை வென்றது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 9-21,8-21 என்ற நேர் செட்டில் சீனாவின் லி வென் மெய்,ஜெங் யு ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து