தங்கம், வைர கற்கள் பதித்த ஆடம்பர கழிவறை கோப்பை - ஹாங்காங் நகை நிறுவனம் தயாரிப்பு

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      உலகம்
gold-diamond toilet 2019 11 07

பெய்ஜிங் : ஹாங்காங்கை சேர்ந்த ஆரோன் ஷம் என்ற நகை நிறுவனம் தங்கம் மற்றும் வைர கற்களை பயன்படுத்தி ஆடம்பர கழிவறை கோப்பையை உருவாக்கி உள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த ஆரோன் ஷம் என்ற நகை நிறுவனம் தங்கம் மற்றும் வைர கற்களை பயன்படுத்தி ஆடம்பர கழிவறை கோப்பையை உருவாக்கி உள்ளது. முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டு உள்ள இந்த கழிவறை கோப்பையில் மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரத்து 815 வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி புல்லட் புரூப் எனப்படும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 லட்சத்து 88 ஆயிரத்து 677 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 9 கோடியே 13 லட்சத்து 51 ஆயிரம்) மதிப்பிலான இந்த கழிவறை கோப்பை தற்போது சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் 2-வது சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவறை கோப்பையை விற்க மனமில்லை என்று கூறிய ஆரோன் ஷம் நிறுவன உரிமையாளர் இதனை அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வைர கற்கள் பொதியப்பட்டுள்ள கழிவறை கோப்பை என்ற பிரிவின் கீழ் உலகின் ஆடம்பர கழிவறை கோப்பைக்கான கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து