முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை சுற்றறிக்கை

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகள் அதிகபட்ச கண்காணிப்பில் ஈடுபடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. உள்துறை அளிக்கும் தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 13-ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெற இருக்கும் நிலையில், அதற்கு முன்பு அயோத்தி நில பிரச்சனை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய ராம்ஜென்மபூமி, பாபர் மசூதி விவகாரத்தின் வழக்கு விசாரணைகள் முற்றிலுமாக முடிவுற்ற நிலையில் தீர்ப்புக்காக இந்தியாவே காத்துக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அயோத்தி முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராம் ஜென்மபூமி, பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடம், அனுமான் கர்ஹி கோவில், கிராணா கடை, ராம்கோட் கோவிலுக்கு வெளியே, கார்கள், பேருந்துகள், மோட்டர் சைக்கள்கள் என எங்கும் காவல்துறையினர் மட்டுமே இருக்கின்றார்கள். அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும்  பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பை வெற்றி, தோல்வி என்ற காணோட்டத்தில் பார்க்க கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து