முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்தார்பூருக்கு வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட்: இம்ரான்கானின் கூற்றுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

கர்தார்பூருக்கு வர இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, அடையாள அட்டை போதுமானது என கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டின் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பிலும், இறையாண்மையிலும் சமரசம் இல்லை என ராணுவம் திட்டவட்டமாக கூறி உள்ளது.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. கர்தார்பூருக்கு செல்வதற்கு இந்தியர்கள் கட்டணமாக 20 டாலர் (சுமார் ரூ.1,400) செலுத்த வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கர்தார்பூர் பயணம் மேற்கொள்ளும் சீக்கியர்களுக்கு அதிரடியாக பல்வேறு சலுகைகளை அறிவித்தார். கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வர பாஸ்போர்ட் தேவையில்லை. செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தால் போதுமானது, வழித்தடம் தொடங்குகிற நாளில் கட்டணத்தில் இருந்து விலக்கு தரப்படும் என தெரிவித்தார். கர்தார்பூருக்கு செல்கிற முதல் இந்திய குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்திப்சிங் பூரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

குர்தார்பூருக்கு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் தேவையில்லை என்ற இம்ரான்கான் அறிவிப்பை தொடர்ந்து, இதை உறுதி செய்ய இந்தியா விரும்பியது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இம்ரான்கான் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், நாங்கள் பாதுகாப்பு இணைப்பை கொண்டுள்ளோம். கர்தார்பூருக்கு சீக்கியர்கள் வருவது சட்டபூர்வமாக இருக்க வேண்டும். பாதுகாப்பில் அல்லது இறையாண்மையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். ஆனால் கர்தார்பூர் பயணத்துக்காக இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்ற இம்ரான்கானின் அறிவிப்பை பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் மாலையில் உறுதி செய்தது. அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பின் போது இதை வெளியிட்டார். மேலும் இன்று 9-ம் தேதி மற்றும் 12-ம் தேதி பயணிப்போர் 20 டாலர் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து