மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      இந்தியா
supreme court 2019 05 07

காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லைக்கு மிக அருகில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்ட திட்டமிட்டுள்ள இந்த அணையால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வருவது முழுமையாக நின்று விடும் அபாயம் உள்ளது. எனவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளது.

இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேலும் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளோம். இதை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். இந்த விரிவான திட்ட அறிக்கையையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி தமிழக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழக அரசு அனுமதியில்லாமல் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்ற மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்குவதற்கு முன்பாகவே தமிழக அரசின் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது காவிரி வழக்கின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. எங்களுக்கு தெரியாமல் அனுமதி அளித்தது தவறு என தமிழக அரசு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தமிழக அரசின் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து