மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம்: காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      தமிழகம்
Madurai meenakshi temple free Laddu CM 2019 11 08 0

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு  வருடந்தோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மேலும், இரத்தினகிரி - அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ஆலங்குடி - அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில், பீர்க்கன்காரணை - அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 2 கோடியே 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழ்ப் பண்பாட்டின் பெட்டகமாகவும், ஆன்மீகத்தின் இருப்பிடமாகவும், கலைத்திறனின் நிலைக் களமாகவும் விளங்குகின்ற திருக்கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாத்து பராமரிப்பது, அன்றாட பூஜைகள் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்வது, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை மூலமாக முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வருடந்தோறும், நாள் முழுவதும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், இரத்தினகிரி, அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் 4,116 சதுர அடி பரப்பளவில், 74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி, அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 2,930 சதுர அடி பரப்பளவில்  67 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் 150 நபர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும்  கூடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், பீர்க்கன்காரணை, அருள்மிகு சூராத்தம்மன் திருக்கோயிலில் 4,381 சதுர அடி பரப்பளவில், 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 நபர்கள் கலந்து கொள்ளும் வகையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் என மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 30 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத் துறையில், நிலை-3 செயல் அலுவலர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட  96 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.   

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அஷோக் டோங்ரே, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து