முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் கடலில் இரட்டை வழி ரயில் பாதை கொண்ட புதிய ரயில் பாலம் கட்டு பணிகள் துவங்க பூமி பூஜை: அதி நவீன தொழில் நுட்பத்துடன்கூடிய மூன்று வகையாக திறக்கும் தூக்குப் பாலம்.

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவை இணைக்கு வகையில் பாம்பன் கடலில் இரு வழியில் ரயில் செல்லும் பாதை கொண்ட புதிய ரயில்பாலமும்,கப்பல்கள்,விசைப்படகுகள் கடந்து செல்வதற்கு அதி நவீன தெழில்நுட்பத்துடன்கூடிய தூக்குப்பாலம் அமைப்பதற்கு கட்டும் பணிகள் துவங்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது.
. உலக புகழ்பெற்ற புனித ஸ்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.இந்த ஸ்தலமானது உலக நாடுகளில் முக்கியம் வாய்ந்தவையாகும்.புனித ஸ்தலமான ராமேசுவரம் நான்கு பக்கமும் கடல் நீரால் சூழ்ந்து தீவுப்பகுதியாக அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியை உலக நாடுகளில் பல  பகுதிகளுடன் இணைக்கும் வகையில்  ராமேசுவரம் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலை தூரத்தில் அமைந்துள்ள பாம்பன் பகுதியில் பாக்ஜலசந்தி கடல் மேல் கடந்த 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்தனர்.இந்த பாலத்தில் மீட்டர்கேச் ரயில் பாதையாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிராட்கேஜ் ரயில் பாதையாக மாற்றம் செய்து தற்போது பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியையும்,பாஜ்சலசந்தி கடல் பகுதியை இணைக்கு வகையில் இரு புறமும் இருந்து இந்த கடல் வழியாக    கப்பல்கள் கடந்து செல்வதற்காக  பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலம் என்ற தூக்குபாலம் அமைக்கபப்ட்டுள்ளது.  இந்த தூக்கும் பாலம்  105 ஆண்டுகளை கடந்த இந்தப் பாலம் கடலில் வீசும் உப்புக் காற்றால் அரிப்பு தன்மை ஏற்பட்டு சமீப காலமாகப் மிகவும் பாதிப்படைந்து வருகிறது. இதனால் இந்த தூக்கு பாலத்தை திறந்து மூடுவதில் ரயில்வே துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.இதனால் இவ்வழியாக வணிக ரீதியாக செல்லும் கப்பல்கள்,சிறிய பயணிகள் கப்பல்கள் செல்ல முடியாமல் இலங்கை வழியாக சுற்றி செல்கிறது.இதனால் செலவீண தொகை அதிகமாக ஏற்பட்டு வருகிறது.மேலும் இந்த ரயில் பாலம் 100 ஆண்டுகளை கடந்ததால்  பாலத்தின் தன்மையும்.வலுவும் குறைந்து வருகிறது.இதை ரயில்வே துறை பொறியாளர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.இதனை தொடர்ந்து ரயில்வே துறை நிர்வாகம் இந்த பாலத்தின் தன்மை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.அதன் பேரில் ராமேசுவரத்தின் முக்கியத்துவம் மற்றும் தன்மையறிந்து மத்திய அரசு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்து அதற்கு முதல் கட்டமாக  ரூ.246 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.இந்த பணிகள் தொடங்குவதற்கு பிரதமர் மோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  கன்னியாகுமாரியில் நடைபெற்ற ஒரு விழாவில் அடிக்கல் நாட்டினார்.இதனையடுத்து கடலில்  பவளப் பாறைகளுக்குப் பாதிப்பின்றி புதிய ரயில் பாலம் அமைக்க பணிகள் தொடங்க ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.அதன் பேரில் இறுதியாத பணிகள் தொடங்க நேற்று மண்டபம் பகுதியிலிருந்து  ரயில் பாலம் தொடங்கு பகுதியில் பணிகள் துவங்க தனியார் பாலம் கட்டும் நிறுவனம் சார்பில் பூமி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் அகமதாபாத் பகுதியை சேரந்த தனியார் நிறுவனமான ரஞ்சித் பில்டர்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி முகேஷ்பட்டேல் தலைமை வகித்து 9.28 மணிக்கு  பூஜை தொடங்கி வைத்தார்.பின்னர் அப்பகுதியில் இயந்திரம் மூலம் மணல்  பரிசோதணை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் சென்னை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதிய பாலத்திற்கான தொழில்நுட்ப அலுவலர்கள் அன்பழகன், ராஜேந்திரன், பாலப் பணிகளை மேற்கொள்ள உள்ள அப்துல்சமத் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 
மூன்று வகையாக திறக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தூக்குபாலம்: 
   மண்டபம் பகுதியிலிருந்து ராமேசுவரம் தீவுப் பகுதியை  இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2 கி.மீ  தொலைதூரத்திற்கு கடலின் இடையே 60 அடி நீளத்திலும்,12 மீட்டர் அகலத்தில் இரண்டு வழியில் ரயில் செல்லும் வகையாகவும்,  கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் வரிசையாக மூன்று தூண்கள் அமைத்து 99 இடங்களில் 99 தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த தூண்களில் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு அதற்கு மேல் இரும்பு கட்டைகள்,தண்டவாளங்கள் அமைக்க உள்ளன.  தற்போதைய உள்ள  ரயில் பாலத்திலிருந்து துவக்கத்தில் 30 மீட்டர் தூரத்திலும், நடுவில் 50 மீட்டர் வரையிலான தூரத்திலும்,முடிவில் 30 மீட்டர் தூரத்திலும் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. தற்போது உள்ள தூக்குப் பாலத்திற்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய  தூக்குப் பாலமும் இதில் அமைகிறது. இதில் கப்பல்கள்,பெரிய மீன்பிடி விசைப்படுகள் இழுகுவாக கடந்து செல்லும் அளவிற்கு சுமார் 22 மீட்டர் உயரத்துடன் அமைக்கபடவுள்ளன. இந்தத் தூக்குப் பாலம் மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் மற்றும் மனித சக்தி என 3  வகையாக திறக்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு அமைக்கபடவுள்ளது.கடலின் அடியில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப தூண்களின் ஆழம் தேவையான அளவில் அதிகரிக்கப்படும் எனவும்,மேலும் பாம்பன் கடலில் தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய பாலத்தின் பணிகளில் 200 முதல் 600 தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும்,  நிர்ணயம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் எனவும்   பாலப் பணிகள் மேற்பார்வையாளர் அப்துல்சமது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து