முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் ஒன்றியத்தில் 100 சதவிகித வெற்றியை பெற வேண்டும் ஆலோசனை கூட்டத்தில்; ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் பேச்சு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளத்தில், பெரியகுளம் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் பேசும்போது, வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களில்  மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தலைமை கழகம் முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இத்தேர்தலில் பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம், 5 பேரூராட்சிகள், 17 ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்திலும் 100 சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து அனைத்து பேரூராட்சி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்களிடம்  தேர்தல் ஆணையத்தால் ஊராட்சி, பேரூராட்சி யாருக்கு ஒதுக்கப்படுள்ளது என்ற பட்டியலை ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், மாவட்ட பொருளாளர் செல்லமுத்து வழங்கினர். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராஜகுரு, மாவட்ட பிரதிநிதி ஆண்டி,  வடுகபட்டி பேரூர் கழக செயலாளர் சுந்தரபாண்டியன், கெங்குவார்பட்டி பேரூர் கழக செயலாளர் காட்டுராஜா, பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, முன்னாள் தாமரைக்குளம் பேரூராட்சி துணைத்தலைவர் சந்தோஷம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் கள்ளிப்பட்டி சிவக்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து