முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவின் வெற்றி விழாவில் பங்கேற்க டிரம்ப் ஆலோசனை?

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ரஷ்யாவின் 75-வது ஆண்டு வெற்றி தின ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழாவில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படையை ரஷ்யா வென்றதை நினைவுகூரும் வகையில், 75-வது ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு 2020 மே மாதத்தில் ராணுவ அணிவகுப்பு விழாவை மாஸ்கோவில் விமரிசையாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்ள வேண்டும் என்று ரஷ்யா விரும்பியுள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு டிரம்ப்புக்கு புடின் அழைப்பு விடுத்ததாகவும், தான் கலந்து கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிரம்ப் ஊடகங்களிடம் பேசியதாக சினுவா ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஊடகங்களிடம் நேற்று கூறியதாவது:-

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து நான் இன்னும் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ததில்லை. 1945-ல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளை ரஷ்யா வென்ற 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ரஷ்யாவின் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு நடைபெறும் ராணுவ அணிவகுப்பு விழாவில் பங்கேற்க புடின் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக நான் புடினைப் பாராட்டுகிறேன். அவர் அழைப்பு விடுத்துள்ள நேரம் எங்களுக்கு அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக உள்ள நேரம். எனவே என்னால் அவரின் அழைப்பை ஏற்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் என்னால் முடிந்தால் நிச்சயம் ரஷ்ய விழாவில் கலந்து கொள்ள செல்வதையே விரும்புகிறேன். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து