முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம்: தீர்ப்பில் சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்திருக்கும் சுப்ரீம் கோர்ட், அதே நேரம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அயோத்தி வழக்கில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பை அளித்துள்ளது. அதே சமயம், வக்பு வாரியம் ஏற்றுக் கொள்ளும் இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்குமாறும் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றுவதாகக் கூறி, இந்து கரசேவகர்கள், பாபர் மசூதியை இடித்தனர். இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயல் என்று தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து