த.மா.கா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியம் பங்கேற்பு:

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2019      மதுரை
10 TMC Executives Advisory Meetin

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
சேடபட்டி ஒன்றியம் அத்திபட்டியில் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.உள்ளாட்சித் தேர்தலில் பங்குகொள்வது குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சேடபட்டி வட்டார தலைவர் கருப்பையா தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் காந்தி,இளைஞரணித் தலைவர் நாகமலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் த.மா.கா மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியம் பங்கேற்று பேசுகையில்: கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சித் தேர்தலின் போது கட்சி நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அதிக இடங்களை கைப்பற்றி மக்கள் பணியாற்றிட கடுமையாக உழைத்திட வேண்டும்.கிராம மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகளை கேட்டறிந்து அவற்றினை நிறைவேற்றிட பாடுபடவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து சேட்பட்டி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிடும் த.மா.கா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது சுய-விபரம் அடங்கிய விண்ணப்பங்களை மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியத்திடம் கொடுத்தனர்.மேலும் கட்சியினை பலப்படுத்துவது,மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இதில் கட்சி நிர்வாகிகள் அய்யாச்சாமி,சமயன்,மகாலிங்கம்,பாண்டி மற்றும் மாவட்ட, ஒன்றிய,கிளைக் கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து