முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணை வந்தடைந்தது-

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

  பரமக்குடி - :வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணை வந்தடைந்தது.அதனை ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக மதகு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
 இராமநாதபுரம் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து  தண்ணீர் திறந்து விட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழக முதல்வர், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிற்கு தொடர்ந்து பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இதனைத் தொடர்ந்து மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கை  மாவட்டத்தில் 1,36,109 ஏக்கர் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் கடந்த 9 ம்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இத்தண்ணீர் ராமநாதபுரம் மாவட்ட எல்கையான பார்த்திபனூர் மதகு அணையை நேற்று மதியம் 1.45 மணிக்கு வந்தடைந்தது.
 பின்பு இராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை முறைபாசன கண்மாய்களுக்கு பாசன வசதி செய்யும் வகையில் மதகு அணையில் இருந்து நேற்று மாலை திறந்து விடப்பட்டது.மேலும் இடது மற்றும் வலது புறக் கால்வாய்கள் மூலமாக திறந்து விடப்பட்ட தண்ணீர் மூலம் 67837 ஏக்கர் பயனடையும்.
 முன்னதாக மதகு அணையில் இருந்து வைகையாற்றில்  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்து மலர்தூவி வரவேற்றனர்.
 இந்நிகழ்ச்சியில், பொதுப் பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ஆர். வெங்கடகிருஷ்ணன்,உதவி செயற்பொறியாளர்கள் ஜி.சிவராமகிருஷ்ணன், எஸ்.கார்த்திகேயன் ,உதவி பொறியாளர்கள் பா.லதா, டி.கார்த்திக் மற்றும் வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பிரமுகர்கள்,விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து