முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐப்பசி பவுர்ணமி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

போடி-   போடியில்,  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.
     ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சிவபெருமானின் அருளும், அன்னபூரணியான பார்வதி தேவியின் அருளும் ஒன்றாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோவிலில் சிவலிங்க பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவலிங்க பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் சுந்தரம் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
     இதனை தொடர்ந்து சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையினர் சார்பில் பரமசிவன் மலைக்கோவிலில் கிரிவல பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. கிரிவல பூஜை மற்றும் அன்னதான ஏற்பாடுகளை சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை பேரவையின் குருநாதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  இதேபோல் போடி பிச்சங்கரை கீழச்சொக்கநாதர் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சிவலிங்க பெருமானுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
   போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பூஜை செய்யப்பட்ட அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சி சுந்தரேசுவரருக்கு 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரணை நடைபெற்றது பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி திருக்கோவிலிலும் அன்னாபிஷேக பூஜை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து