முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம் - கேப்டன் ரோகித் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர் : வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டி - 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று கேப்டன் ரோகித்சர்மா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நாக்பூரில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

 பந்து வீச்சாளர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மிடில் ஓவரில் பனித்துளியால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்து இருந்தேன். ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 69 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைத்தனர். நான் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். இந்த போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையே சாரும். இவ்வாறு ரோகித்சர்மா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து