முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள்

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, - விருதுநகர் மாவட்டம் அமமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் முத்துராஜா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரியா, அமமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் வீராச்சாமி  மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய  நிர்வாகிகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட  அம்மா பேரவை செயலாளர் சிந்துமுருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வெங்கடேஷ், விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக செயலாளர் சிட்டிபாபு  மற்றும் வத்ராப் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய இணை செயலாளர் கூமாபட்டி கனகராஜ்  மற்றும் ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர்  அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அமமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் முத்துராஜா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரியா, அமமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் வீராச்சாமி  மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர்  வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து