முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதுகாப்புப் படையினருக்கு அமித்ஷா உத்தரவு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நகர்ப்புற நக்சல்கள், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புப் படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியிலுள்ள துணைப்பாதுகாப்புப் படை தலைமை அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது புதிதாக உருவாகியுள்ள ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அடுத்த 6 மாதங்களுக்கு இடதுசாரி தீவிரவாதிகள், நகர்ப்புற நக்சல்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய பாதுகாப்புப் படையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

இது குறித்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 6 மாதத்திற்குள் நக்சல்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற நக்சல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மருத்துவ மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த பீமா கரோகனில் நடந்த கலவரத்தில் தொடர்புடையவர்கள், நக்சல்களுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்ததற்காக போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நகர்ப்புற நக்சல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிற்கு எதிரான சதி செயல்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது கருணை காட்ட மாட்டோம் என பல முறை அமித்ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து