3 முட்டை சாப்பிட்டதற்கு ரூ. 1672 கட்டணம் அதிர்ச்சியில் பாலிவுட் இசையமைப்பாளர்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      இந்தியா
shekhar-ravjianii 2019 11 16

மும்பை : சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை இந்தி நடிகர் ராகுல் போஸ் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். கடந்த ஜூலை மாதம் சண்டிகரில் நட்சத்திர ஓட்டலில் 2 வாழைப் பழங்களுக்காக அவருக்கு ரூ.442 கட்டண பில் வழங்கப் பட்ட சம்பவம் இணையத்தில் வெகுவாக பேசப்பட்டது.இதையடுத்து அவரது டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்த டுவிட்டர் பதிவைத் தொடர்ந்து, அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.25,000 அபராதம் அந்த ஓட்டலுக்கு விதிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திப்பட இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி அதேபோன்ற ஓர் அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவர் அகமதாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்சியில் தங்கியிருந்தார். அப்போது அவர் வெறும் 3 முட்டைகள் சாப்பிட்டதற்காக ரூ.1672 கட்டணமாக வசூலிக் கப்பட்டது.இது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று சேகர் ரவ்ஜியானி டுவீட் செய்துள்ளார். அதற்கான பில்லையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து