முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் - சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேட்டி

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : எனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும், எனது பயணம் வெற்றிகரமான பயணம் என்று சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அப்போது விமானநிலையத்தில் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன். தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இங்கிருந்து சென்ற தமிழர்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கிறார்கள். இங்குள்ள சாதகமான சூழ்நிலைப்பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்த வகையில் எனது அமெரிக்க சுற்றுப்பயணம் ஒரு வெற்றி பயணம். இந்த பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும். எனது பயணத்தின் போது ரூ.700 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. உலக வங்கி அதிகாரிகளிடமும் சுமூகப்பேச்சு நடத்தினேன். இதையடுத்து தமிழக வீட்டுவசதித்துறைக்கு ரூ.5000 கோடி கொடுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. நான் அங்கு சென்ற அங்குள்ள தமிழர்கள் மிகஅன்புடன் வரவேற்றனர். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்க வீடுகளை பார்வையிட்டேன். குறைந்த விலையில் அதே நேரம் தரமான வீடுகளை கட்டும் தொழில் நுட்பத்தை அறிந்து வந்திருக்கிறேன்.அமெரிக்காவில் கடும் குளிர் நிலவுகிறது. அதாவது மைனஸ் 13 டிகிரியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தனது பயணத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து