திண்டுக்கல்லில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 781 பேர் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      திண்டுக்கல்
19 Dglpolice

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் 781 பேர் பங்கேற்றனர்.
திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 2ம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை,சிறைக்காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 3  நாட்கள் தேர்வு நடந்த நிலையில் இத்தேர்வுகள் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. முதல் நாளன்று ஆண்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல்,கயிறு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று  780 ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.  6 பேர் பங்கேற்கவில்லை. முதலில் ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு எறிதல் போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன.  இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுகிறது.
தேர்வு நடந்த மைதானத்திற்கு தேர்வர்களை தவிர அந்நியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஐ.ஜி.ரஞ்சித்குமார், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. நிர்மல் ஜோஷி குமார், மாவட்ட எஸ்.பி. சக்திவேல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து