முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோவிலுக்கு உள்ளது போல் சபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : குருவாயூர் கோவிலுக்கு உள்ளது போல் சபரிமலை தரிசனத்துக்கு என தனி சட்டம் ஒன்றை கேரள அரசு உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.

41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை சுட்டிக் காட்டி ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். முன்னதாக நடுத்தர வயதுடைய பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து தரிசிக்க வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதே போன்று ஆந்திராவிலிருந்து வந்த 30 மற்றும் 40 வயதுடைய 2 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நேற்று முன்தினம் 12 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சிறுமியின் வயது சான்று பற்றிய சோதனையில் 12 வயது கடந்திருந்தது தெரிய வந்தது. இதனால் சிறுமியை கீழேயே தங்க வைத்து விட்டு தந்தை உள்ளிட்ட மற்ற உறவினர்களை போலீசார் கோவிலுக்கு செல்ல அனுமதித்தனர்.

இந்த நிலையில், சபரிமலை கோவில் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையில் உள்ள அமர்வில் இந்த விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,

குருவாயூரில் கோவிலுக்கும், பக்தர்கள் வழிபாட்டுக்கும் என்றே பிரத்யேகமாக தனி சட்டம் நடைமுறையில் உள்ளது. அதே போன்று சபரிமலை ஆலய நிர்வாகத்துக்கும், பக்தர்கள் வழிபாட்டுக்கும் என்று புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கேரள மாநில அரசு இந்த தனி சட்டத்தை உருவாக்குவதற்காக 4 வார கால அவகாசம் அளிக்கிறோம். அந்த தனி சட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 3-ம் தேதிக்குள் கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த தனி சட்டம் உருவாக்குவதை தாமதிக்க கூடாது. புதிய அறிவிப்புகள் வெளிவரும் வரை பழைய உத்தரவு செல்லும். அதன்படி சபரிமலை ஆலயத்தில் தற்போது அனைத்து வயது பெண்கள் சென்று வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து