முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் மீது பொருளாதார தடை: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : ஹாங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் முதல் மசோதா ஹாங்காங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.அதே போல் ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்ட மசோதா ஹாங்காங் போலீஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடை செய்யும். அத்துடன் இந்த மசோதா, ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும்.இதற்கிடையே ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கான அமெரிக்கா தூதருக்கு சீன வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து