முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ,வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 28-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து