நாட்டிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம்

இந்தியாவிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே அதிக டாக்டர்கள் கொண்ட மாநிலங்களில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள் 1,73,384 உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட டாக்டர்களின் எண்ணிக்கை 1,35,456 ஆகும். மூன்றாவது இடத்தை கர்நாடகா மாநிலமும் (டாக்டர்களின் எண்ணிக்கை1,22,875), நான்காவது இடத்தை குஜராத் மாநிலமும் (டாக்டர்களின் எண்ணிக்கை 66,944), ஐந்தாவது இடத்தை ராஜஸ்தான் மாநிலமும் (டாக்டர்களின் எண்ணிக்கை 43,388) பிடித்துள்ளன. நாட்டிலேயே குறைவான டாக்டர்களை கொண்ட மாநிலமாக மிசோரம் இடம் பெற்றுள்ளது. மிசோரமில் வெறும் 74 டாக்டர்களே உள்ளனர்.