முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வினோதமான நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் தவித்து வரும் 32 வயது இளைஞர் .

புதன்கிழமை, 27 நவம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், = திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறி பட்டி கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமியின் மகன்  கோபி, 15 வருடத்திற்க்கு முன்பே தந்தை இறந்த நிலையில் அம்மா விஜயலட்சுமி அரவணைப்பில் கோபி வளர்ந்து வந்துள்ளார். 32 வயதான கோபி டிப்ளமோ வரை படித்துள்ளார். படித்து முடித்து 2009யில் திருப்பூரில் தனியார் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.  மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை மற்றவர்களைப் போல் இயல்பாக இருந்து வந்துள்ளார் கோபி. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு திடிரென தலைவலி ஏற்பட்டு அவரது தண்டு வளத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் இடுப்புக்கு கீழ் உணர்ச்சியற்று கால்கள் செயல்பாடு அற்றுப் போயின. ( ACUTE TRANSVERAE MYLITIES) என்று சொல்லக்கூடிய கடுமையான குறுக்குவெட்டு அழற்சி என்ற புதுவிதமான நோய் தாக்கியது. இதனால் ஆடி ஓடி திரிந்த கோபி தற்போது  நான்கு சுவர்களுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது கோபி அம்மா நூற்பாலையில் பணிபுரிந்து வரும் வருமானத்தை கொண்டு  போதிய வசதி இல்லாமாலும் கோபிக்கு  அரசு தரும் உதவித்தொகை ரூ 1500  வைத்து வாழ்ந்து வருகிறார். கோபிக்கு மாதம் 3 ஆயிரம் முதல் 4000 வரை மருத்துவ செலவு ஆவதாகவும், இந்த நோயால் காலில் எரிச்சல் ஏற்பட்டு தினமும் அவதிபட்டு வருவதாகவும் தெரிவித்தார். தலைவலியில் தொடங்கிய நோய் தண்டுவடத்தில் கொண்டு வந்துவிட்டதாக வேதனை தெரிவிக்கும் கோபி பிசியோதெரபி சிகிச்சை சிகிச்சை பெற்றும் பயனில்லை என்கிறார்.
 கோபியின் அம்மா விஜயலட்சுமி வேலைக்கு சென்றால் தான் அன்றாடும் உணவிற்க்கு வழி என்பதால் தினமும் வேலைக்கு செல்வதால் 75 வயதிற்க்கு மேலாகவும் கோபி பாட்டி தள்ளாடும் வயதில் பிச்சையம்மாள் தன் பேரன் கோபியை அன்றாடும் கவனித்து வருகிறார்.
அரிய நோயால் அவதிப்படும் கோபிக்கு அவரது நண்பர்கள் அவ்வப்போது சக்கர நாற்காலியில் அமர வைத்து வெளியே அழைத்து சென்று வருகிறார்கள்,
இது குறித்து கோபி கூறுகையில் இந்த மாதிரி நோய் யாருக்கும் வர கூடாது, இது போன்ற நோய்களுக்கு மருந்துகள் அரசு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், எனக்கு சுயதொழில் செய்து என்னை போல் உள்ள மாற்றுதிறளானிகளுக்கு உதவ வேண்டும் என்பது ஆசை அதற்க்கு அரசாங்கமோ சமூக ஆர்வலர்களோ உதவி செய்தால் நல்ல தொழில் செய்து வாழ்க்கையில் என்னை போல் உள்ளவர்களுக்கு உதவி செய்வேன் என உருக்கமாக தெரிவித்தார்.
அரிய நோயால் அவதிப்படும் கோபிக்கு வாழக்கையிலாவது  வழி ஏற்பட அரசாங்கம் முன்வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து