ஆசிய வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2019      விளையாட்டு
Indian couple wins gold 2019 11 28

பாங்காக் : 21-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா ஜோடி 158-151 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் யி ஹசுன் சென்-சிக் லுக் சென் இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இதன் ஆண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், மோகன் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 232-233 என்ற புள்ளி கணக்கில் தென் கொரியா அணியிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது. பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 215-231 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியா அணியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. இந்த போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்தை வென்றது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து