எச்.ஐ.வி.- எய்ட்ஸ் தொற்றுள்ளோரை அரவணைத்து தன்னம்பிக்கை வளர உதவுங்கள்: முதல்வர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      தமிழகம்
cm edapadi speech 2019 11 26

சென்னை : எச்.ஐ.வி - எய்ட்ஸ் தொற்றுள்ளோரைபரிவுடன் அரவணைத்து, சமஉரிமைஅளித்து அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி.பழனிசாமி வெளியிட்ட உலக எய்ட்ஸ் தின செய்தி வருமாறு-

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி - எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் ஆகும். எச்.ஐ.வி. - எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு அரசு, எச்.ஐ.வி - எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக 10 கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அறக்கட்டளைக்கு இந்த நிதியாண்டில் (2019 - 2020) 5 கோடி ரூபாயினை கூடுதல் வைப்பு நிதியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் கூடுதலாக 1000 குழந்தைகளுக்கு அந்நிதியிலிருந்து வரும் வட்டியின் மூலம் ஊட்டச்சத்துமிக்க உணவு, கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், எச்.ஐ.வி -எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் எச்.ஐ.வி -எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல், எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டைபொறுத்தவரை எச்.ஐ.வி -எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு, 29 மாவட்டங்களில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகுகள் மூலம் எச்.ஐ.வி - எய்ட்ஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய 2,883 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிக்க 55 கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள், 174 இணைப்பு கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் வட்டார அளவில் செயல்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை, மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி - எய்ட்ஸ் குறித்த மீம்ஸ் விழிப்புணர்வு போட்டிகளின் மூலமாகவும், நடமாடும் தகவல் கல்வி தொடர்பு விழிப்புணர்வு வாகனங்களின் மூலமாகவும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி - எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்தொற்று சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எச்.ஐ.வி. - எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் எச்.ஐ.வி - எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்று, எச்.ஐ.வி - எய்ட்ஸ் நோயை தடுக்க தன்னார்வ ரத்தப் பரிசோதனை செய்திடவேண்டும் என்றும், எச்.ஐ.வி -  எய்ட்ஸ் தொற்றுள்ளோரை பரிவுடன் அரவணைத்து, சமஉரிமை அளித்து, அவர்களது தன்னம்பிக்கை வளர உதவிட வேண்டுமென்றும்  அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து