முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வெளுத்துக்கட்டும் மழை: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - சென்னை, கடலூர், தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் இருநாட்கள்  மழை நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில்  மழை பெய்யும். புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல் கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.  ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புண்டு.

சூறாவளிக்காற்று வீசும் என்பதால் லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். கடலூரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதே போல் சென்னையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை நிவாரண பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து