எகிப்து-துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Onion 2019 12 01

புதுடெல்லி : எகிப்து, துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலங்களில் கனமழை பெய்ததால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.140 ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில், மத்திய நுகர்வோர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். டிசம்பர் பிற்பகுதியில் இருந்து ஜனவரி முதல் தேதிகளுக்குள் வெங்காயம் இந்தியா வந்தடையும். கூடுதலாக எகிப்தில் இருந்தும், டிசம்பர் மத்திக்குள் 6090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து