முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும்?

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தோம். அதன்படி டிசம்பர் முதல் வாரம் முடிவதற்குள் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்தால் இன்று கூட அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

டிசம்பர் 2-ல் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 13-க்குள் தேர்தல் தேதியை அறிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து