முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்டையும் மாற்றுவோம் - ராகுல் காந்தி வாக்குறுதி

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி:

ஜார்க்கன்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்டையும் மாற்றுவோம் என தெரிவித்தார்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சிம்டேகா பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த ஓராண்டுகள் அங்கு காட்சி மாறிவிட்டது. அதைப்போல் ஜார்க்கன்டில் எங்கள் கூட்டணிக்கு நீங்கள் வாக்களித்தால் சத்திஸ்கரைப் போல் ஜார்க்கன்ட் மாநிலத்தையும் மாற்றிக் காட்டுவோம் என குறிப்பிட்டார்.சத்திஸ்கரில் பழங்குடியின மக்களின் நிலங்களை எல்லாம் பாஜக அரசு பறித்து தொழிலதிபர்களுக்கு கொடுத்து விட்டது. எங்கள் ஆட்சியில் அந்த நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடன் ஒப்படைக்கப்பட்டன. உங்களது நிலம், காடுகள் மற்றும் நீர்வளத்துக்கு பாதுகாவலர்களாக நாங்கள் இருப்போம்.நாங்கள் வாக்குறுதி அளித்ததுபோல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். இங்கேயும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து