முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் 1000 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தாம்பரம் : கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் முடிச்சூர் பகுதியில் உள்ள 1000 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அடையாறு ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் படப்பை அருகில் உள்ள மணிமங்கலம் பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு அது அடையாறு ஆற்றில் விடப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், அன்னை அஞ்சுகம் நகர், பெருங்களத்தூர் அன்னை சத்யாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இந்த இடங்கள் அனைத்தும் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ளன.

அடையாறு ஆற்றில் சென்ற தண்ணீர் கரை தாழ்வான பகுதிகள் வழியாக நேற்று காலையில் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியில் சென்றனர். பலர் தங்களது உறவினர்கள் வீடுகளில் போய் தங்கினார்கள். முகாம்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். அதே நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் டியூப்புகளை படகுகளாக மாற்றி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டனர். ஏற்கனவே பெய்த மழையால் முடிச்சூர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த நிலையில் நேற்று அடையாறு ஆற்று தண்ணீரும் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தினரும் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து