முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் கிளீன் ஸ்வீப் செய்த இந்தியா

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

காத்மாண்டு : நேபாளத்தில் நடந்து வரும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களையும் வென்று கிளீன் ஸ்வீப் செய்தனர்.

துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையை இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் முறியடித்தாலும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் அமைப்பால் தெற்காசிய விளையாட்டுப் போட்டி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அது உலக சாதனையை முறியடித்ததாக எடுக்க முடியாது. ஆனால், புள்ளிகள் கணக்கில் உலக சாதனையை முறியடித்து விட்டார் இந்தியப் பெண் மெகுலி கோஷ் என்பது பெருமைக்குரியது.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 13-வது தெற்காசியப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவுகள், பூடான், நேபாளம் ஆகிய 7 நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.26 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 2,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 15 விளையாட்டுப் பிரிவுகளில் 487 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.காத்மாண்டு நகரில் உள்ள தசரத் அரங்கில் நேற்று 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் இறுதிச்சுற்று வரை 253.3 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதில் உலக சாதனை புள்ளிகள் என்பது 252.9 புள்ளிகள்தான். ஆனால், அதைக்காட்டிலும் 0.4 புள்ளிகள் அதிகமாக இந்திய வீரர் கோஷ் எடுத்து தங்கம் வென்றார்.துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையை இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் முறியடித்தாலும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் அமைப்பால் தெற்காசிய விளையாட்டுப் போட்டி அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் அது உலக சாதனையை முறியடித்தகாக எடுக்க முடியாது. ஆனால், புள்ளிகள் கணக்கில் உலக சாதனையை முறியடித்து விட்டார் இந்தியர் மெகுலி கோஷ் என்பது பெருமைக்குரியது.இந்திய வீராங்கனை ஸ்ரீயங்கா சடாங்கி 250.8 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்ரேயா அகர்வால் 227.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக 10 மீட்டர் ஏர் ரைபில் அணி பிரிவில் இந்திய அணி தங்கமும் வென்றது.இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு ஐ.எஸ்.எஸ்.எப். உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் மெகுலி 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளியும், 2018-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் வெள்ளியும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து