முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ல் புவி வெப்பம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரிக்கும்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : வரும் 2020-ம் ஆண்டுடன் நிறைவடையவிருக்கும் பதின்ம ஆண்டில்தான் புவியின் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் வானியல் பிரிவான உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததைவிட உலகின் வெப்பநிலை இந்த ஆண்டில் இதுவரை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. இதன் மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக புவி வெப்பம் கொண்ட 3 ஆண்டுகளில் ஒன்றாக 2019-ம் ஆண்டு ஆகியுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை எரிப்பது, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, பயிா் வளா்ப்பு, சரக்குப் போக்குவரத்து ஆகிய செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு காா்பன் பொருள்கள் இந்த ஆண்டு கலக்கவிருக்கின்றன. இதன் காரணமாக, புவியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும். எனவே, பதின்ம ஆண்டுகளிலேயே 2020-ம் ஆண்டில் முடியும் பதின்ம ஆண்டில்தான் புவியின் வெப்பம் மிக அதிகமாக இருக்கவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து