முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் புவியரசன் பேட்டி

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை காட்டிலும் கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது,

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மலைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மீதான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை மாவட்ட பாபநாசத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கும்பகோணம், நன்னிலம் 3 செ.மீ. குடவாசல், ஆலங்குடி, செய்யூர், சேரன்மகாதேவி - 2 செ.மீ., அம்பாசமுத்திரம், குன்னூர், தாம்பரம் - 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். சூறைக்காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி மாவட்ட கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து