முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை விட ஆஸ்திரேலியா பந்து வீச்சு யூனிட் சிறந்தது: ரிக்கி பாண்டிங்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : இந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அபாரமாக பந்து வீசி வருகின்றனர். பும்ரா டெஸ்ட் அணியில் இடம் பிடித்தபின் மிகவும் அசுர பலத்துடன் இந்திய பந்து வீச்சு யுனிட் திகழ்ந்து வருகிறது. இதனால் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு யுனிட் என்ற பெருமையை பெற்றுள்ளது. என்றாலும், சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஒரு விஷயத்தால் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யூனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பிரம்மாண்டமானதது. பும்ரா, முகமது ஷமி ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக அமேசிங்காக பவுலிங் செய்து வருகின்றனர். உமேஷ் யாதவை இஷாந்த் சர்மாவுடன் ஒப்பிடலாம். இருவரும் மிகமிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவின் தாக்குதல் சிறப்பானது. ஆனால், அவர்களுடைய (இந்தியா) சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் திணறுகிறார்கள். இந்திய ஸ்பின்னர்களை விட நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பான ரெகார்டு வைத்துள்ளா். இடது கை  வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை அணிக்கு வழங்குகிறார். அவரது பந்து வீச்சு சிறப்பு. அவரைப் போன்று மற்றொருவரை நான் பார்க்கவில்லை. ஆகவே, இந்தியாவை விட இந்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யூனிட் சிறந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து