முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடான் தீ விபத்தில் 3 தமிழர்கள் உயிரிழப்பு: தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் அதிகமான இந்தியர்களும் வேலை செய்து வந்தனர்.
இந்த தொழிற்சாலையில்

நேற்று முன்தினம் வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்த போது அந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.  இதனால் ஏற்பட்ட தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கியவர்களில் 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோரின் உடல்கள் மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது,

சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். தீவிபத்தில் காணாமல் போன 3 தமிழர்களின் நிலையை கண்டறிய சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து