சீன மணமகன்களுக்கு பாக். பெண்கள் 629 பேர் விற்பனை: அதிர்ச்சி தகவல்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      உலகம்
Pak womens sales china bride 2019 12 05

லாகூர் : 629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப் பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த பெண்கள் சீனர்களின் மனைவிகளாக சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டாலும் அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவுக்கு அழைத்து செல்லப்படும் பெண்கள் தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தங்களை மீட்குமாறு கெஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் திருமணமாகி சீனாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான் அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில் 629 பெண்கள் சீனர்களுக்கு திருமணம் செய்யப்பட்டு கடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விசாரணைகளால் சீனாவுடனான நட்புறவில் பாதிப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் அரசு அஞ்சுகிறது. இதையடுத்து இது தொடர்பான விசாரணைகளுக்கு பாகிஸ்தான் அரசு முட்டுக்கட்டை போட்டு வருவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படும் சீனர்கள் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து சீனாவுக்கு கடத்தி சென்றாலும் சட்டம் தங்களை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில் இந்த குற்றத்தில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து