முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளவியல் பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் கலந்துரையாட மாணவர்களுக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மாணவர்களுடன் தேர்வுகள் பற்றிய கலந்துரையாடல் குறித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

பரிக்சா பே சார்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம். MyGov இணையதளம் மூலம் இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தலைப்புகளில் ஏதேனும் ஒன்று குறித்து சுமார் 1500 வார்த்தைகளில் தங்களின் பதிலை எழுதவேண்டும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள், 500 வார்த்தைகளுக்கு மிகாமல், பிரதமரிடம் தங்களின் கேள்வியை முன்வைக்கலாம். ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே இதை எழுத முடியும். இதில் உரிய முறையில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ், பரிசாக வழங்கப்படும். பிரதமரிடம் கேள்வி கேட்கத் தேர்வாகும் மாணவரின் படைப்புக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சிறப்புச் சான்றிதழை வழங்கும். மாணவர்கள் இந்தப் போட்டியில் தனியாகவோ, ஆசிரியர்கள் மூலமாகவோ கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள கடைசி தேதி வரும் 23-ம் தேதியாகும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் https://innovate.mygov.in/ppc-2020/ என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து