டெண்டுல்கருடன் கோலியை சரிநிகராக வைக்க மாட்டேன் - பாக். வீரர் அப்துல் ரசாக் சொல்கிறார்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
Tendulkar Kohli 2019 12 05

இஸ்லாமாபாத் : விராட் கோலி மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் சீரான முறையில் ரன்களை குவிப்பவராக இருக்கலாம் ஆனால் சச்சின் டெண்டுல்கரின் கிளாஸ் வகையில் கோலியை சேர்க்க முடியாது என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் பாகிஸ்தானுக்கு அவர் அளித்த நேர்காணலில், 1992 முதல் 2007 வரை நாங்கள் எதிர்த்து விளையாடிய உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இப்போது இல்லை. டி20 கிரிக்கெட் அனைத்தையும் மாற்றி விட்டது. பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அனைத்திலும் ஆழம் எதுவும் இல்லை. இவை கிரிக்கெட்டின் அடிப்படைகள்.விராட் கோலியை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்கோர் செய்யத் தொடங்கினால் ஸ்கோர் செய்து கொண்டேயிருக்கிறார், ஆம், அவர்களுக்கு அவர் நல்ல பிளேயர்தான். சீரான முறையில் ஆடுகிறார். ஆனால் டெண்டுல்கருடன் சரிநிகராக ஒப்பிட மாட்டேன். டெண்டுல்கர் வேறு ஒரு தரநிலையில் இருக்கிறார் என்றார் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர். அதே போல் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் பவுலர்கள் தவறானவர்கள் என்ற ரசாக், வலையில் வீசுவதை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து