இந்தி பாடலை பாடிய டோனி; சமூக வலைத்தளங்களில் வைரல்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      விளையாட்டு
dhoni singing viral 2019 12 05

ராஞ்சி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டோனி, நிகழ்ச்சி ஒன்றில் இந்தி பாடலை பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த உலக கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும், டோனி பங்கேற்காமல் உள்ளார்.  எனினும் சமூக வலைத்தளங்களில்  எப்போதும் போல ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று லைக்குகளை அள்ளி வருகிறார். அவ்வப்போது, டோனி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் அதிக அளவில் வைரல் ஆகும். அண்மையில் கூட டோனி தனது மகள் ஸிவாவுடன் இணைந்து, ஜீப்  கழுவும்  வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில்,  இந்தி பாடல் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பாடுகின்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் ஜாசி கில் என்பவர் டோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷிக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை டோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து