4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம்: தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
central govt2018-08-25

ஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தெலுங்கானா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

கடந்த 27-ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரை ஐதராபாத் காவல்துறை கைது செய்தது. விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, 4 பேரும் தப்பி ஓட முயன்றதால் 4 பேரையும் காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. மருத்துவரை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுன்ட்டர் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், என்கவுண்டர் தொடர்பாக அறிக்கை அளிக்க தெலுங்கானா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து