4 பேர் என்கவுண்ட்டர் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த முடிவு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      இந்தியா
Telangana  encounter 2019 12 06

தெலுங்கானாவில் 4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சாத்நகர் பகுதியை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக லாரி ஓட்டுனர்களான முகமது ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்களான சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் செஞ்சலகுடா சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிட்டனர். கொலை செய்தது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது அந்த 4 பேரும் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுண்ட்டரில் 4 பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  இந்த சம்பவம் தொடர்பாக மீடியாவில் வெளியான தகவலை வைத்து, தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று உண்மையை கண்டறியும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. எஸ்.எஸ்.பி. தலைமையிலான இந்த குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து