முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து பிரான்சில் 8 லட்சம் பேர் வீதிகளில் போராட்டம்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

பிரான்ஸ் நாட்டில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து ஒரே நாளில் 8 லட்சம் ஊழியர்கள் வீதிகளில் இறங்கி போராடியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 
பிரான்சில் அரசின் ஓய்வூதிய திட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு புதிய விதிமுறைகளை இந்த திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  தவிர, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும். ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓவ்வூதிய தொகை வேறுபடும் என பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முதலில் சில தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், போலீசார், விமானநிலைய ஊழியர்கள் என அனைவரும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். 

இதனால் பிரான்ஸ் நாடு ஸ்தம்பித்தது. நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. தலைநகர் பாரிசில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ‘ஈபில் டவர்’ உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சி செய்தனர்.

முக்கிய நகரங்களில் இருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதிகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து