பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      தமிழகம்
Nirmala sitharaman 2019 02 28

Source: provided

புதுடெல்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஹெச்.டி. தலைமை உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது,  ஆகஸ்ட் - செப்டம்பர் காலகட்டத்தில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நுகர்வுத் திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் பொதுத் துறை வங்கிகள் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளன. உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீட்டைப் பெருக்குவது உள்ளிட்ட பணிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்துகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெரும்பாலான தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கின. தற்போது நிலைமை சீராகியிருந்தாலும், ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பு குறித்த கோரிக்கைகள் பலமாக இருக்கின்றன. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைக்கும் மத்திய அரசு இணங்கவில்லை. ஜி.எஸ்.டி.யின் கீழ் வசூலிக்கப்படும் வரி வருவாயும் குறைவாகவே இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து