முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் ராமநாதபுரம் மாணவர்கள் 2-ம் இடம் பிடித்து சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவ மாணவிகள் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
     தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் துளிர் மற்றும் ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி இந்த ஆண்டுக்கான வினாடி வினா போட்டிகள் மாவட்டந்தோறும் தாலுகா அளவிலும், பின்னர் மாவட்ட அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் நடத்தப்பட்டு முடிந்துள்ளன. இதில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தனர். இதன்படி மாநில அளவிலான வினாடி வினா போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. இதில் ஜுனியர், சீனியர் என பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
      இதில் ஜுனியர் பிரிவினருக்கு நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி மாணவி ஆரோக்யா மருத்துவமனை டாக்டர் பரணிக்குமார் மகள் ஜெகத்ஜனனி, மற்றும் மாணவி ஹர்சிதா, மாணவன் சுகிர்தன் ஆகியோர் 2-ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவ-மாணவிகளுக்கு கல்பாக்கம் விஞ்ஞானி அனந்தசிவன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளை அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் மற்றும் ராமநாதபுரம் நேசனல் அகாடமி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து