முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளில் நெசவாளர்களுக்கு நெசவு உபகர்ணங்கள் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 பரமக்குடி டி- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடிகர் ரஜினிகாந்தின் 70 -வது பிறந்தநாள் விழா நகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.நகர் செயலாளர் சந்தை நாகா(எ) நாகநாதன் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா கடந்த நவம்பர் 30 -ம் தேதி முதல் துவங்கி நேற்று டிசம்பர் 12 -ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தினம் ஒரு கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்,முத்தாலம்மன் கோவிலில் வெள்ளிதேர் பவனி,அங்கன்வாடி மையங்களில் சிலேடு,இனிப்பு வழங்குதல் ,சௌராட்டிரா இளநிலைப் பள்ளியில் மரக்கன்று நடுவிழா,இனிப்பு வழங்குதல்,முதியோர் இல்லத்தில் வேஷ்டி,சேலை,உணவு  வழங்குதல்,தொழுநோய் காப்பகத்தில் போர்வை,அரிசி வழங்குதல்,மனநலகாப்பகத்தில் கேக் வெட்டி இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்குதல் ,பரமக்குடி -எமனேஸ்வரம் பகுதிகளில் வாழும் நெசவாளர்களுக்கு நெசவு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட  நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த்,மாவட்ட இணைச்செயலாளர் செந்தில்வேல்,மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் பாலன்,நகர் இணைச்செயலாளர் நாகநாதன்,நகர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், நகர் நெசவாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து