ரோபோ மூலம் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் வங்கி

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
robot work bank 2019 12 13

கொச்சி : கொச்சியை தலைமையிடமாக கொண்ட தனியார் வங்கியில், பணிக்குத் தேவையான ஆட்களை ரோபோவே தேர்வு செய்து வருகிறது.

பொதுத்துறை வங்கிகள், தங்களுக்கான ஊழியர்களைத் தேர்வுசெய்ய கடினமான எழுத்துத் தேர்வுகளையே நடத்தி வருகின்றன. எனினும் தனியார் வங்கிகள் அவற்றில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி வருகின்றன. குறிப்பாக கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட பெடரல் வங்கி, புது முயற்சியை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, புதிய ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முழுப் பொறுப்பும் ரோபோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எச்.டி.எப்.சி. உள்ளிட்ட பிற தனியார் வங்கிகள், விண்ணப்பதாரர்களின் ஆரம்ப நிலை வடிகட்டலுக்கு, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் பெடரல் வங்கி, பெட்ரெக்ரூட் என்னும் தொழில்நுட்பம் மூலம் ரோபோவை பயன்படுத்துகிறது. விண்ணப்பதாரர்களின் சுய விவரக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ரோபோ கேள்விகளைக் கேட்கும். பலகட்ட அடிப்படையில் அறிவுச் சோதனைகளை நடத்தும். ரோபோ தேர்வு முடிந்தபிறகு உளவியல் சோதனைகள், விளையாட்டு அடிப்படையிலான மதிப்பீட்டு செயல்முறைகள் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதிகட்டத் தேர்வு நடத்தப்படும். இதை மட்டும் உயர்மட்ட அதிகாரிகள் நடத்துவர். எனினும் வேலைக்கான நியமன ஆணையை ரோபோவே வழங்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரின் பெற்றோருக்கும் ரோபோ தகவல் அனுப்பும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து